நடிக்க ஆரம்பித்தால் இன்னும் பிரபலமாகி விடுவேன்- இசைப்புயல்..!!

நடிக்க ஆரம்பித்தால் இன்னும் பிரபலமாகி விடுவேன் என்று இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் கூறியுள்ளார்.
இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து அவரே தயாரித்துள்ள 99 ஸாங்ஸ் படத்தின் பாடல்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த திரைப் படத்தை இயக்குனர் விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானிடம் நேர்காணல் மூலம் நெட்டிசன்கள் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் முதல் கேள்வியாக நீங்கள் படம் இயக்கி நடிக்கப்போவதாக தகவல்கள் பரவி வருகிறது உண்மையா என்று கேட்டதற்கு ஏ ஆர் ரஹ்மான் ” இயக்குனராக ஆவதற்கு இன்னும் பல காலங்கள் ஆகலாம், ஆனால், அதற்கு இப்போது நேரமில்லை. படம் தயாரிப்பதும் கதை எழுதுவது சுலபமாக இருக்கிறது. என்றும் கூறியுள்ளார்.
அதனை தொடர்ந்து ரஹ்மானிடம் நீங்கள் கதாநாயகனாக நடிப்பீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ரஹ்மான் ” எங்கென்று சொந்த உலகம் இருக்கிறது நான் அதிலே இருக்க விரும்புகிறேன். அதுமட்டுமில்ல நான் நடிக்க ஆரம்பித்தால் இன்னும் பிரபலமாகி விடுவேன்” என்றும் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை முதல்..இந்தியாவுக்கு வரி விதித்த ட்ரம்ப் வரை!
April 3, 2025
டிரம்ப் அதிரடி வரி விதிப்பு.! உலக நாடுகள் கடும் எதிர்ப்பு! சீனா, கனடா, ஆஸ்திரேலியா, தைவான்….
April 3, 2025