USElections 2020: “அனைவருக்குமான அதிபராக இருப்பேன்” – ஜோ பைடன்
வாக்கு எண்ணிக்கை எனது வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளது என்று பைடன் தெரிவித்துள்ளார்.
கடந்த 3-ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில், வாக்கு எண்ணும் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி 264 சபை வாக்குகள் பெற்று ஜோ பைடனே முன்னிலையில் உள்ளார்.
இதனிடையே பைடன் உரையாற்றினார்.அப்பொழுது அவர் பேசுகையில், எனக்கு வாக்களித்தவர்கள் ,அளிக்காதவர்கள் அனைவருக்குமான அதிபராக பணியாற்றுவதே என்னுடைய கடமை .வாக்கு எண்ணிக்கை எனது வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளது .ஜனநாயகக் கட்சிக்கு அனைத்து தரப்பு அமெரிக்கர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.அதிபர் தேர்தலில் வெற்றி பெறப் போகிறேன் என்று தெரிவித்துள்ளார்.