யாருக்கு வேணாலும் தங்கச்சியா நடிப்பேன், ஆனால் இவருக்கு மட்டும் மாட்டேன் – ஐஸ்வர்யா ராஜேஷ்!
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் திரையுலகில் பல முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பெற்றவர். இவர் அண்மைக் காலங்களாக தங்கச்சி கதாபாத்திரத்தில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயன் நம்ம வீட்டு பிள்ளை எனும் படத்தில் தங்கையாக நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்து இருந்தார்.
இந்நிலையில் அண்மையில் பேசிய இவரிடம், நீங்கள் தங்கச்சி கதாபாத்திரத்தில் கலக்கலாக நடிக்கிறீர்கள். யாருடன் எல்லாம் தங்கச்சி கதாபாத்திரத்தில் இனியும் நடிக்க விரும்புகிறீர்கள் என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஐஸ்வர்யா, நான் எந்த நடிகருடன் வேண்டுமானாலும் தங்கச்சி கதாபாத்திரத்தில் நடிப்பேன். ஆனால் விஜய் சாருடன் மட்டும் நான் கண்டிப்பாக அப்படி நடிக்க மாட்டேன் என கூறி உள்ளார்.