அஜித் சாருக்கு திருமணம் ஆனபோது நான் கவலைப்பட்டேன் – பிரியங்கா..!!
அஜித் சார் மிகவும் அழகான நடிகர் என்று ரோஜா சீரியலில் நடிக்கும் நடிகை பிரியங்கா அஜித்தை பாராட்டி கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பால் உச்சத்தில் இருக்க கூடிய நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். தமிழகத்தில் மிகவும் அதிகமான ரசிகர்கள் பட்டாளம் இவருக்கும் உள்ளது. அஜித்துடன் நடிக்க பல நடிகர்கள் நடிகைகள் ஆர்வத்துடன் காத்திருக்கார்கள் என்றே கூறலாம். மேலும் அஜித்தை பல நடிகர்கள் புகழ்ந்து கூறுவது உண்டு அந்த வகையில் ரோஜா சீரியலில் நடிக்கும் நடிகை பிரியங்கா அஜித்தை பாராட்டி கூறியுள்ளார்.
அஜித் குறித்து கூறுகையில் ” அஜித் சார் மிகவும் அழகான நடிகர். அஜித் சாருக்கு திருமணம் ஆனபோது நான் கவலைப்பட்டேன். அவர் ஒரு ஹீரோ என்று காட்டமாட்டார் எல்லாரையும் சமமாக நினைத்து பழகி பேசுவார். எனக்கு அவரை மிகவும் பிடிக்கும் அவரின் தீவிர ரசிகை நான். சிறிய வயதில் இருந்தே எனக்கு அவரை மிகவும் பிடிக்கும் ” என்று கூறியுள்ளார்.
மேலும் நடிகர் அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்துவருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. மேலும் படத்தின் பர்ஸ்ட் லுக் வருகின்ற மே 1 ஆம் தேதி அஜித் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது.