தலயின் ஒப்பனிங் பார்த்து அசந்துட்டேன்.! பிரபல நடிகை வெளிப்படை பேச்சு.!
அப்பவே ரஜினி படத்திற்கு கிடைக்கும் ஒப்பனிங் போலவே தலயின் சிட்டிசன் படத்திற்கு கிடைத்தை பார்த்து அசந்து விட்டதாக நக்மா கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில், தன்னுடைய கடின உழைப்பினாலும், விடாமுயற்சியாலும் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் அஜித் குமார்.தற்போது இவர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.தற்போது கொரோனா பிரச்சினை காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 2001ல் அஜித் நடிப்பில் சரவண சுப்பையா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘சிட்டிசன்’. இந்த படம் இன்றுடன் வெளியாகி 19 ஆண்டுகள் ஆகிய நிலையில், தல ரசிகர்கள் ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்டாக்கி வருவதோடு, அந்த படத்தினை குறித்த தகவல்களையும் வைரலாக்கி வருகின்றனர். இந்த நிலையில், சிட்டிசன் படத்தில் நடித்த நக்மா அளித்த பேட்டியில், இந்த படத்தினை குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் இந்த படத்தின் ஷூட்டிங் அனைத்தையும் முடித்து விட்டு, ரிலீஸ் அன்று தியேட்டரில் பார்க்க சென்ற போது அசந்து விட்டாராம். ஏனெனில் தல அஜித்தின் படத்திற்கு அப்பவே ரஜினி படத்திற்கு கிடைக்கும் ஓப்பனிங் போல் இருந்தது என்று கூறியுள்ளார்.