உங்களின் அன்பால், கடவுளின் அருளால் காப்பாற்றப்பட்டேன் – இயக்குனர் சேரன்.!
இயக்குனர் சேரன் தனது ட்வீட்டர் பக்கத்தில் நலமாய் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் நடிகர் கௌதம் கார்த்தி, சேரன் ஆகியோர் ஆனந்தம் விளையாடும் வீடு என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கான படப்பிடிப்பு திண்டுக்கல்லில்விறுவிறுப்பாக நடைபெற்று வந்த போது, திண்டுக்கல்லில் உள்ள ஒரு வீட்டில் படப்பிடிப்பு நடந்த போது கால் இடறி விழுந்த சேரனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இயக்குனர் சேரன் தனது ட்வீட்டர் பக்கத்தில் நலமாய் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் டிவிட்டரில் கூறியிருப்பது, “நலம் விசாரிக்கும் நண்பர்களுக்கு வணக்கம்.. நலமாக இருக்கிறேன்.பயம் ஒன்றும் இல்லை. உங்களின் அன்பால், கடவுளின் அருளால் காப்பாற்றப்பட்டேன் என்பதே சரி. அனைவரும் அனைத்து வேலைகளிலும் கவனமாக இருக்கவும். நன்றி அனைவர்க்கும்.” என்று தெரிவித்துள்ளார்.
நலம் விசாரிக்கும் நண்பர்களுக்கு வணக்கம்.. நலமாக இருக்கிறேன்.. பயம் ஒன்றும் இல்லை.. உங்களின் அன்பால், கடவுளின் அருளால் காப்பாற்றப்பட்டேன் என்பதே சரி.. அனைவரும் அனைத்து வேலைகளிலும் கவனமாக இருக்கவும்.. நன்றி அனைவர்க்கும்..
— Cheran (@directorcheran) August 5, 2021