டைட்டானிக் படத்திற்கு பின் அதிகம் கேலி செய்யப்பட்டேன் – கேட் வின்ஸ்லெட்
என் வாழ்வில் இந்த படத்திற்கு பின் ஏராளமான உடல் ரீதியான அவமானங்களை எதிர் கொண்டதோடு, அதிகம் கேலி செய்யப்பட்டேன் என டைட்டானிக் படத்தின் நாயகி தெரிவித்துள்ளார்.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘டைட்டானிக்’. இப்படமானது அட்லாண்டிக் பெருங்கடலில் 1912 ஆம் ஆண்டு மூழ்கிய ஒரு கப்பலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதாகும். இப்படத்திற்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், இப்படம் 11 ஆஸ்கர் விருதுகளை பெற்றுள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் நாயகியாக நடித்த கேட் வின்ஸ்லெட் இணையத்தில் கலந்துரையாடலின் போது படத்தின் மூலம் கிடைத்த புகழால் தனக்கு கிடைத்த அவமானங்கள் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார். அப்போது கூறிய அவர், ‘டைட்டானிக் திரைப்படம் வெளியான பின் என்னை நானே பாதுகாத்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டேன். ஒவ்வொரு நாளுக்கும் இடையிலான இடைவெளி மிக நீண்டதாக இருந்தது.
என் வாழ்வில் இந்த படத்திற்கு பின் ஏராளமான உடல் ரீதியான அவமானங்களை எதிர் கொண்டதோடு, அதிகம் கேலி செய்யப்பட்டேன் என்றும், பிரிட்டிஷ் பத்திரிகையாளர்கள் என்னிடம் அன்பாக நடந்து கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.