அசோக் செல்வனை பார்க்கும் போது பொறாமையா இருந்துது – சதிஷ்
வெங்கட் பிரபு இயக்கத்தில் அண்மையில் வெளியாகிய மாநாடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக அசோக் செல்வனை நாயகனாக வைத்து மன்மதலீலை எனும் படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார்.
மன்மத லீலை படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள் நடித்திருந்தனர். அடுத்ததாக அசோக்செல்வன் ஆர் ரவீந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ஹாஸ்டல் எனும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ள நிலையில், சதிஷ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்திற்க்கான அறிமுக நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. அப்பொழுது பேசிய சதிஷ் ஹாஸ்டல் படம் தனக்கு நல்ல அனுபவத்தை தந்ததாகவும், பழைய நினைவுகளை தூண்டுவதாகவும் கூறியுள்ளார். மேலும், சமீபத்தில் வெளியாகிய மன்மதலீலை படத்தில் அசோக் செல்வன் மூன்று கதாநாயகிகளோடு நடித்ததை பார்த்ததும் பொறாமையாக இருந்தது என கூறியுள்ளார்.