நான் அனைவரையும் முத்தமிட விரும்புகிறேன்! அதிபர் ட்ரம்ப் அதிரடி பேச்சு!
அனைவரையும் முத்தமிட விரும்புவதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த பல முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், அமெரிக்காவில் இந்த வைரஸ் பாதிப்பால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பில், உலகளவில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில், வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அதிபர் ட்ரம்ப் புளோரிடாவில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி பேசிய போது, ‘நான் சக்தி வாய்ந்தவனாக உணருகிறேன். அனைவரையும் முத்தமிட விரும்புகிறேன்.’ என தெரிவித்துள்ளார்.