மூக்குத்தி அம்மன் படத்திலிருந்து 2 நிமிட வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மூக்குத்தி அம்மன்.நடிகரான ஆர்.ஜே.பாலாஜி மற்றும் சரவணன் இணைந்து இயக்கியுள்ள இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இந்த படத்தில் மவுலி,ஊர்வசி , ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் .
நாகர்கோவிலை சேர்ந்த நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் ஆர்.ஜே.பாலாஜி .இவரது குடும்பத்தில் உள்ளவர்களிடம் அவரது குலத்தெய்வமான மூக்குத்தி அம்மன் காட்சி கொடுக்கிறார் . அதனையடுத்து தங்களது ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஆர்.ஜே . பாலாஜியின் குடும்பம் முறையிடுகிறார்கள் . அவர்களுக்கு வாழ்க்கை என்ன என்பதை புரிய வைக்கிறார் நயன்தாரா .காமெடி படமாக உருவாகியுள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படம் வரும் தீபாவளி அன்று ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படவுள்ளது .
இந்த நிலையில் தற்போது இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி தனது டுவிட்டர் பக்கத்தில் தீபாவளிக்கு ரெடியா என்ற பதிவுடன் மூக்குத்தி அம்மன் படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ஆர்.ஜே.பாலாஜி நம்ம குலத்தெய்வம் இதானு கூற ,என்னை நம்பல இல்ல , வேணும்னா ஏதாவது கேளுங்க தரேன் என்று மூக்குத்தி அம்மன் கூறுகிறார் . அதற்கு மூச்சு விடாமல் தங்களது தேவைகளை ஆர்.ஜே.பாலாஜியின் குடும்பம் கூறுகின்றனர். தற்போது அந்த 2 நிமிட வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…