தளபதி விஜய்யுடன் தான் நடிக்க ஆசை – ராஷி கண்ணா..!!
தளபதி விஜய்யுடன் நடிக்க ஆசை என்று நடிகை ராஷி கண்ணா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்க கூடிய நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி சொல்லியே தெரிய வேண்டாம். இந்த நிலையில் தற்போது நடிகர் விஜய் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகும் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார் படத்திற்கான அடுத்த கட்ட படப்பிடிப்பு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஜூன் மாதத்திற்கு தள்ளி சென்றுள்ளது.
இந்த நிலையில், நடிகர் விஜயை பற்றி சில பிரபலங்கள் பெருமையாக மற்றும் நடிக்க ஆசை படுவதாக கூறுவது உண்டு அந்த வகையில், தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வளம் வரும் ராஷி கண்ணா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் குறியாதவது ” நான் விஜயின் மிகப்பெரிய ரசிகை அவருடன் நடிக்க ஆவலுடன் காத்துள்ளேன் எனது மிகப்பெரிய ஆசை அது” என்று கூறியுள்ளார்.