நான் ஏலியன்களை பார்த்துள்ளேன், அதற்கான ஆதாரமும் என்னிடம் உள்ளது – இங்கிலாந்து பெண்மணி!
இங்கிலாந்தில் உள்ள மேற்கு யார்க்ஷயரில் வசித்து வரக்கூடிய 50 வயதுடைய பெண்மணி ஒருவர் தான் ஏலியன்களையும் அவர்களின் பறக்கும் தட்டையும் கண்டதாக கூறியுள்ளார்.
பொதுவாக ஏலியன்கள், வேற்றுக்கிரகவாசிகள் என்றாலே மக்கள் அனைவருமே ஒரு கட்டுக் கதையாகவும் கார்ட்டூன் கதாபாத்திரங்களாகவும் தான் தற்பொழுது நம்புகின்றனர். ஏனென்றால் ஏலியன்கள் இருக்கிறது என பல ஆராய்ச்சிகள் மற்றும் தேடல்கள் எழுந்தாலும் அவை இருப்பதற்கான எந்த ஒரு சாத்தியக் கூறுகள் அல்லது இருக்கிறது என்று நிரூபிக்க கூடிய ஒரு உண்மையான காரணங்கள் இதுவரை யாருக்கும் கிடைக்கவில்லை. பலரும் ஏலியன்கள் இருக்கிறது எனக் கூறினாலும் முறையான காரணங்களை யாராலும் கண்டறிய முடியவில்லை. ஆனால் தற்போது இங்கிலாந்தில் உள்ள மேற்கு யார்க்ஷயரில் உள்ள பவுலா எனும் 50 வயதுடைய பெண்மணி ஒருவர் தான் 50 முறைக்கும் மேல் வேற்றுக்கிரக வாசிகளுடன் பேசி உள்ளதாகவும், அதை நிரூபிக்க என்னிடம் ஆதாரம் இருக்கிறது எனவும் கூறியுள்ளார்.
மேலும் இது குறித்து தெரிவித்துள்ள அவர், நான் பேசுவது வேடிக்கையாக இருந்தாலும், இது உண்மைதான் தான், நான் வேற்றுகிரகவாசிகளையும் அவர்களின் பறக்கும் தட்டுகளையும் பார்த்திருக்கிறேன். அவர்கள் நம்மிடம் இல்லாத சில வினோதமான பொருட்களை எனக்கு காட்டினார்கள். மேலும் அழகிய இயற்கைக் காட்சியை கொண்ட சில இடங்களையும் அவர்கள் எனக்கு காட்டினார்கள். அவர்களுடன் பேசிய பின்பு எனது உடலில் சில தழும்புகளும் ஏற்பட்டுள்ளது. இந்த தழும்புகள் வேற்றுக்கிரக வாசிகளுடன் நான் பேசி உள்ளேன் என்பதை நிரூபிப்பதற்கு ஆதாரமாக அமையும் என தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தான் கூறுவதை பலர் நம்ப மாட்டார்கள், அப்படி நம்பாத பொழுது எனக்கு வருத்தமாக இருக்காது. ஏனென்றால், நானே கதைகளை கூட நம்ப மாட்டேன். அப்படி இருக்கும் பொழுது எப்படி நான் சொல்வதை பிறர் நம்புவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.