நான் நம்பி ஏமாந்துட்டன், தோத்துட்டன் – வனிதா விஜயகுமார் கண்ணீர் மல்க பேச்சு!

Published by
Rebekal

பீட்டர் பாலை நான் நம்பி ஏமாந்துட்டன், தோத்துட்டன் என வனிதா விஜயகுமார் கண்ணீர் மல்க பேசியுள்ளார்.

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனரும் நடிகருமான விஜயகுமார் அவர்களின் இரண்டாவது மனைவியின் மகளும் தான் நடிகை வனிதா விஜயகுமார். இவர் ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்றுள்ள நிலையில் அண்மையில் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பீட்டருக்கு ஏற்கனவே எலிசபெத் எனும் மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ள நிலையில் விவாகரத்து கூட பெறாமல் அவர் வனிதாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டது சில நாட்களாக சமூக வலைதளங்களில் முழுவதும் மிக சர்ச்சையாக பேசப்பட்டுக் கொண்டே இருந்தது. மேலும் பீட்டர் பால் அதிக அளவில் மது போதைக்கு அடிமையானவர் எனவும் அவரது முதல் மனைவி கூறியிருந்தார். இருப்பினும் முதல் மனைவி, வனிதாவின் குடும்பத்தினர். பீட்டரின் குடும்பத்தினர் என அனைவரையும் எதிர்த்து நின்று வனிதா திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் தற்பொழுது வனிதாவுக்கும் பீட்டருக்கும் இடையே பிரிவு ஏற்பட்டு விட்டதாக சமூக வலைதளங்கள் முழுவதும் பல்வேறு கருத்துக்கள் பரவி வந்தது. இந்த கருத்துக்களுக்கு தற்பொழுது பதில் அளித்து தனது யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டுள்ள வனிதா விஜயகுமார் கண்ணீர் மல்க பேசியுள்ளார். பீட்டருக்கு ஏற்கனவே நெஞ்சுவலி ஏற்பட்டு லட்சக்கணக்கில் வனிதா விஜயகுமார் செலவு செய்து அவரை காப்பாற்றினார். அண்மையில் வனிதா தனது குழந்தைகளுடன் கோவை சென்றிருந்தார். அப்போது அவர் மது அதிகம் அருந்துகிறார் என்பதை அறிந்த வனிதா கண்டித்துள்ளார். வனிதாவுக்கு மறைவாக அவர் அதிகம் குடித்ததால், இரண்டாவது முறையாக அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
விசாரித்ததில் அவர் அதிக அளவு புகைப்பிடித்தல் மற்றும் மது போதைக்கு அடிமையாகி இருந்தது தெரிய வந்ததால், அதனை கைவிடுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இரண்டாவது முறை நெஞ்சு வலிக்கு மருத்துவம் பார்த்த பிறகும் பீட்டர் பால் அதிக அளவில் குடித்ததாக வனிதா கூறியுள்ளார். எனவே தான் தங்களுக்குள் சில நாட்களாக பிரச்சினை இருந்து வருவதாகவும், ஆனால் பீட்டர் பால் தற்பொழுது வீட்டிலேயே இல்லை அவர் கடந்த சில நாட்களாக போன் கூட எடுக்க வில்லை என கண்ணீர் மல்க கூறியுள்ளார். தற்போது முதல் மனைவி கூறியது உண்மை என தனக்கு தோன்றுவதாகவும், நான் ஏமாந்து விட்டேன், நான் தோற்றுவிட்டேன். ஆனால் எந்த ஒரு தவறான முடிவையும் எடுக்க மாட்டேன் என்னுடைய வாழ்க்கையில் நான் தோற்றது முழுவதும் அன்பால் தான் என வனிதா கண்ணீர் மல்க பேசியுள்ளார்.
Published by
Rebekal

Recent Posts

போப் மறைவு: பிரதமர் மோடி முதல் விஜய் வரை அரசியல் தலைவர்கள் இரங்கல் செய்தி.!

போப் மறைவு: பிரதமர் மோடி முதல் விஜய் வரை அரசியல் தலைவர்கள் இரங்கல் செய்தி.!

சென்னை : கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88) காலமானார். நிமோனியா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வந்த போப் பிரான்சிஸ்,…

2 hours ago

உஷாரா இருங்க!! புழக்கத்தில் புதுவகை 500 ரூபாய் கள்ள நோட்டு.. மத்திய அரசு எச்சரிக்கை.!

டெல்லி : அசலை மிஞ்சும் வகையில் புது வகையான ரூ.500 கள்ள நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளதாக பொதுமக்களுக்கு மத்திய உள்துறை…

2 hours ago

காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு 3 மாதம் சிறை! நாகர்கோயில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

நாகர்கோவில் : கடந்த 2014ஆம் ஆண்டு கன்னியாகுமரி மேற்கு பகுதியில் உள்ள மிடாலம் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு புறம்போக்கு…

3 hours ago

“HIV தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவித்தொகை” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.!

சென்னை : 2025-26ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்பொழுது,…

3 hours ago

நீட் தேர்வை ரத்து செய்தால் தான் பாஜகவுடன் கூட்டணி என சொல்ல முடியுமா? முதலமைச்சர் – இபிஎஸ் காரசார வாதம்.!

சென்னை: இன்றைய சட்டப்பேரவையில் கேள்வி பதில் நேரத்தில் பேசிய, எடப்பாடி பழனிசாமி மாற்றம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடையே காரசார வாதம்…

5 hours ago

பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் இடம்பிடித்த வருண்..வருடாந்திர ஊதியம் இவ்வளவா?

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) 2024-25 சீசனுக்கான (அக்டோபர் 1, 2024 முதல் செப்டம்பர் 30,…

5 hours ago