நான் நூலிழையில் உயிர் தப்பினேன்! 4 நொடிகளுக்கு முன்பு வரை அங்கு தான் இருந்தேன்!

நான் நூலிழையில் உயிர் தப்பினேன்.
இயக்குனர் சங்கர் இயக்கத்தில், உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாக்கி வரும் திரைப்படம் இந்தியன்-2. இந்த படத்தின் படப்பிடிப்புக்காக செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் அவர்கள் கூறுகையில், ‘நான் நூலிழையில் உயிர்பிழைத்தேன். நான்கு நொடிகளுக்கு முன்புவரை நான் அங்கு தான் இருந்தேன். சினிமாவில் பாதுகாப்பு இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் மற்றோரு சம்பவம் நிகழ்ந்துள்ளது என கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இந்தியன்-2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து என் குடும்பத்தில் நிகழ்ந்ததாக கருதுகிறேன். இதுபோன்ற விபத்து இனி நடக்காமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய நேரம் இது என கூறியுள்ளார்.