என் கதாபாத்திரத்தை அஜித் சாருக்கு சமர்ப்பிக்கிறேன் – சார்பட்டா “வேம்புலி” நெகிழ்ச்சி பதிவு.!
சார்பட்டா பரம்பரை படத்தின் வேம்புலி கதாபாத்திரத்தை அஜித் சாருக்கு சமர்ப்பிக்கிறேன் என்று நடிகர் ஜான் கொக்கென் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் ஜான் கொக்கென் தமிழ் சினிமாவில் வீரம், பாகுபலி, கேஜிஎப் படங்களில் நடித்து பிரபலமானவர். வீரம் படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடித்திருப்பார். தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் நேற்று அமேசான் பிரேமில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் “வேம்புலி” என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் ஜான் கொக்கென் நடித்திருந்தார்.
நேற்று வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இதில் வேம்புலி மற்றும் டான்ஸிங் ரோஸ் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென்க் நடிப்பிற்கு பலர் பாராட்டி வருகின்றார்கள்.
இந்த நிலையில் இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் ஜான் கொக்கென் ” என்னை நம்புவதற்கும்எப்போதும் என்னை ஊக்கப்படுத்தியதற்கும் நன்றி அஜித் சார். வீரம் படப்பிடிப்பு நாட்களில் உங்களுடன் கழித்த நேரம் எனக்கு வாழ்க்கைப் பாடங்கள். ஒவ்வொரு நாளும் கடினமாக உழைக்கவும், சிறந்த மனிதராகவும் மாற சொல்லிக்கொடுத்தது. இந்த கதாபாத்திரத்தை “வெம்புலி” உங்களுக்காக அர்ப்பணிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram