மாஸ்டர் படத்தை என் மகளோடு பார்த்தேன் – சுரேஷ் ரெய்னா.!

மாஸ்டர் படத்தின் ஹிந்தி டப்பிங்கை எனது மகளுடன் பார்த்தேன் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 13- ஆம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான திரைப்படம் மாஸ்டர். கடந்த வருடம் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் திரையரங்குகள் மூடப்பட்டு இந்த ஆண்டு ஜனவரி மாதம் திரையரங்குகள் திறக்கப்பட்டு மாஸ்டர் படம் வெளியாகி விநியோகதஸ்தர்களுக்கு லாபம் கொடுத்தது. இந்த திரைப்படம் தமிழ் , தெலுங்கு, ஹிந்தி போன்ற பல மொழிகளில் வெளியானது.
இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்திருந்தார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று பல ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் நடனமாடி வீடியோக்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வந்தனர். சுரேஷ் ரெய்னாவும், நடனம் செய்து வீடியோவை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், டிஎண்பிஎல் கமெண்ட்ரியில் கலந்து கொண்ட சுரேஷ் ரெய்னா மாஸ்டர் படத்தையும், விஜய் குறித்தும் பேசியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், “மாஸ்டர் படத்தில் விஜயின் நடிப்பு எனக்கு பிடித்திருந்தது. மாஸ்டர் படத்தின் ஹிந்தி டப்பிங்கை எனது மகளுடன் பார்த்தேன்” என்று கூறியுள்ளார்.
Vaathi rampage???????? @ImRaina????❤️#Master @actorvijay pic.twitter.com/KzHBiYRYHh
— மகேந்திரன் ரவி (@MahiVijay07) July 19, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025