இந்த அம்மாவின் அன்பில் என் தாயை பார்த்தேன் – அருண் விஜய்.!

ரோட்டுக் கடையில் உணவருந்திய போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை நடிகர் அருண் விஜய் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவர் தற்போது இயக்குனர், ஹரி இயக்கத்தில் தனது 33-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்தபோது, காயம் ஏற்பட்டு சில நாட்கள் படப்பிடிப்பில் இருந்து நடிகர் அருண் விஜய் விலகி இருந்தார். தற்போது காயம் சரியாகி மீண்டும் படப்பிடிப்பில் கொண்டுள்ளார்.
இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி வரை அங்கு படப்பிடிப்பு நடக்கும் என்று தகவல் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், ராமேஸ்வரத்தில் படப்பிடிப்பின் போது, மதிய இடைவேளையில் அருகே இருந்த ரோட்டுக் கடையில் நடிகர் அருண்விஜய் உணவருந்த சென்றுள்ளார். அங்கு கடையில் மீன் வறுத்துக்கொண்டிருந்த அம்மாவையே கட்டியணைத்து புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ” ரோட்டுக் கடையில் உணவருந்திய போது. இந்த அம்மாவின் அன்பில் என் தாயை பார்த்தேன். இந்த அன்பு தான் நம்மளை இயக்கிக் கொண்டிருக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram