கார் விபத்தில் சிக்கிய சில நிமிடங்களில் இதயத்துடிப்பு நின்று, நரகத்தையும் சொர்க்கத்தையும் பார்த்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
பொதுவாக சொர்க்கம், நரகம் ஆகிய இரண்டும் உள்ளது என்று பெரும்பாலும் உலகில் உள்ள அனைத்து மக்களுமே நம்பக் கூடிய ஒன்றுதான். மேலும், பலர் நான் சொர்க்கத்தை பார்த்திருக்கிறேன், நரகத்தை பார்த்திருக்கிறேன் கனவு மூலமாக பார்த்திருக்கிறேன் என்று சொல்லுவது வழக்கம். இருப்பினும் இவை நமது அறிவுக்கு எட்டாத ஒரு விஷயமாகவே தற்போது வரை இருந்து வருகிறது. இந்நிலையில் ஒரு கார் விபத்தில் சிக்கிய ஜெஃப் கூல்டர் எனும் காவல்துறை அதிகாரி ஒருவர் இது குறித்து தனது அனுபவத்தை கூறியுள்ளார்.
அதாவது அவர் ஒரு பயங்கரமான கார் விபத்தில் சிக்கியதாகவும், விபத்திற்குப் பின்பதாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தாலும், அவரது இதயத்துடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக நிற்க தொடங்கியதும் அவரது ஆத்மா உடலை விட்டு வெளியேறுவதை அவர் உணர்ந்ததாகவும் கூறியுள்ளார். ஒரு இருட்டான பனிமூட்டமான ஒரு பகுதியை அவரால் காண முடிந்ததுடன், அந்நேரம் அவர் தனது மனைவியின் கையை பிடித்துக் கொண்டு இருந்தது அவருக்கு ஞாபகத்தில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அதன் பின் ஒரு புறம் சிரிப்பு மற்றும் மறுபுறத்தில் அழுகை சத்தம் கேட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் சில மோசமான உருவங்களை அவர் பார்க்க நேரிட்டதாகவும், அதன் பின் அவருக்கு மீண்டும் உலகில் இருக்கக்கூடிய உணர்வு வந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இவரது இந்த வாழ்க்கை நிகழ்வு பலருக்கும் நரகம், சொர்க்கம் என்ற ஒன்று இருக்கிறது என்பதை மேலும் உறுதியாக நம்புவதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது.
இருப்பினும், சில மருத்துவர்கள் என்ன தெரிவிக்கிறார்கள் என்றால் ஒருவர் விபத்து காரணமாகவோ அல்லது உடல் நலம் பாதிக்கப்பட்டோ மரணத்தை நெருங்க நேரிடும் பொழுது, அவர்கள் உயிர் வாழ வேண்டும் என்பதற்காக சில காட்சிகளை மனது உருவாக்கும். அதில் ஒரு நிகழ்வு தான் இதுவும் என தெரிவிக்கின்றனர்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…