”தனுஷை என் சொந்த புள்ளையா நினைச்சு தான் பாடுனேன்- கிடக்குழி மாரியம்மாள்..!

Published by
பால முருகன்

கர்ணன் படத்தில் இடம்பெற்ற கண்டா வரச்சொல்லுங்க பாடலை பாடிய கிடக்குழி மாரியம்மாள் என் சொந்த பிள்ளைக்கு பாடுனதா நினைச்சிட்டுத்தான் இந்த பாடலை நான் பாடுனேன் என்று கூறியுள்ளார். 

நடிகர் தனுஷ் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். நடிகை ராஜீஷா விஜயன் இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.

இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து இந்த படத்திலிருந்து முதல் பாடலான கண்டா வரச்சொல்லுங்க என்ற பாடல் கடந்த 18 ஆம் தேதி வெளியானது. வெளியாகி 3 வது நாளாக இந்த பாடல் யூடியூபில் நம்பர் 1 ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்த பாடலை மாரிசெல்வராஜ் எழுதியுள்ளார். சந்தோஷ் நாராயணன் மற்றும் கிடக்குழி மாரியம்மாள் ஆகிய இருவரும் பாடியுள்ளார்கள்.

இந்த நிலையில் இந்த பாடலை பாடிய கிடக்குழி மாரியம்மாள் படத்தில் பாடியதை குறித்து சில விஷயங்களை கூறியுள்ளார் இதில் பேசிய கிடக்குழி மாரியம்மாள் ” படத்தில் பட வாய்ப்பளித்த மாரிசெல்வராஜிற்கு நன்றி, அடுத்ததாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் குழந்தைக்கு சொல்லிக்கொடுப்பது போல் பாடலை பட சொல்லிக்கொடுத்தார். இந்த படத்தின் பாடல் ரெக்கார்டிங் போயிட்டு இருந்த போது நடிகர் தனுஷ் சந்தோஷ் நாராயணனிற்கு போன் செய்து பாடல் மிகவும் அருமையாக இருக்கு அந்த அம்மாவின் ஊர் எங்கு இருக்கிறது என்பதை விசாரி என்று தனுஷ் கூறியதாக சந்தோஷ் என்னிடம் கூறினார்.

தனுஷ் சார் சொன்னது எனக்கு மிகவும் சந்தோஷமா இருந்தது. இன்னும் நான் தனுஷை நேரில் காணவில்லை.  என்னோட மகன் வயது தனுஷுக்கு. என்னோட சொந்த பிள்ளைக்கு பாடுனதா நினைச்சிட்டுத்தான் இந்த பாடலை நான் பாடுனேன். இந்தப் பாட்டுக்காக மாரி தம்பிக்கும், சந்தோஷ் நாரயணன் சாருக்கும் பெரிய நன்றிகடன் பட்டிருக்கேன். இதுவரைக்கும் நான் பட்ட கஷ்டத்துக்கு விடியல் வந்திருக்குனு நினைக்குறேன்” என்றும் கூறியுள்ளார். மேலும் தற்போது இந்த பாடல் பட்டயை கிளப்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

வாட்ஸ்அப் செய்திகளை ‘அவர்கள்’ கண்காணிக்க முடியும்! மார்க் ஸுக்கர்பர்க் பகீர் தகவல்!  

வாட்ஸ்அப் செய்திகளை ‘அவர்கள்’ கண்காணிக்க முடியும்! மார்க் ஸுக்கர்பர்க் பகீர் தகவல்!

நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில்,  தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…

5 hours ago

இந்திய ராணுவ தின விழா அணிவகுப்பில் ரோபோ நாய்கள்!

புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…

6 hours ago

அடேங்கப்பா..கரும்பு சாப்பிட்டா வாய் துர்நாற்றம் அடிக்காதா.?

"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால்  பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…

9 hours ago

ரசிகர்களுக்கு செம சர்பிரைஸ்.! போட்டோவோடு வெளியான ‘வாடிவாசல்’ அட்டகாச அப்டேட்!

சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…

9 hours ago

ரூ.5 லட்சம் பரிசு.., ஒரு சவரன் தங்கப்பதக்கம்! முதலமைச்சர் வழங்கிய தமிழக அரசு விருது லிஸ்ட் இதோ…

சென்னை :  z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…

10 hours ago

‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…

1 day ago