நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது குறித்த தகவல் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
தனுஷ் – செல்வராகவன் இருவரும் 10 ஆண்டுகளுக்கு பிறகு நானே வருவேன் படத்தில் இணையவுள்ளனர். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இதற்கான அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் வெளியானது.
இந்த படத்தின் டைட்டில் மற்றும் கதையை இயக்குனர் செல்வராகவன் மாற்ற முடிவு செய்துள்ளதாகவும், படத்திற்கு ராயன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவியது. ஆனால் இதுகுறித்து எந்த அறிவிப்பு வெளியாகவில்லை.
மேலும், இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி தொடங்கும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆகஸ்ட் மாதம் முடிந்து, செப்டம்பர் மாதம் தொடங்கியும் இன்னும் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை.
இந்த நிலையில், நானே வருவேன் திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற தகவல் கிடைத்துள்ளது அதன்படி, இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் அதாவது அக்டோபர் 15-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…