பீஸ்ட் படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.! – தளபதி 66 இயக்குனர் வம்சி.!

Default Image

பீஸ்ட் படத்திற்கு ஆவலுடன் காத்திருப்பதாக இயக்குனர் வம்சி பைடிபல்லி ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

நடிகர் விஜய் – இயக்குனர் நெல்சன் திலீப் குமார் கூட்டணியில் உருவாகி வரும்  திரைப்படம் “பீஸ்ட்”. இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இப்படத்தில் செல்வராகவன், சைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், லில்லிபட் பரூக்கி போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

beast vijay movie 2

இந்த படத்திற்காக விஜய் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துள்ளார்கள். ரசிகர்கள் மட்டுமின்றி, சில திரையுலக பிரபலங்களும் படத்திற்காக காத்துள்ளனர். அந்த வகையில், தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனரான வம்சி பைடிபல்லி ட்வீட்டர் பக்கத்தில் பீஸ்ட் படத்திற்காக ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

vamshi paidipally

விஜயின் 66-வது படத்தை இயக்குனர் வம்சி பைடிபல்லி இப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். இதற்கான அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

இந்த அறிவிப்புக்கு வாழ்த்தி தெரிவிக்கும் வகையில், இயக்குனர் நெல்சன் திலீப் குமார் ட்வீட்டர் பக்கத்தில் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். அதற்கு நன்றி தெரிவித்த வம்சி, ட்விட்டரில் “நன்றி நெல்சன் பீஸ்ட் படத்திற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்