பிரதமர் மோடியுடன் இணைந்து இரு நாட்டு உறவை வலுப்படுத்த எதிர்நோக்கியிருக்கிறேன் – நாஃப்தலி பென்னட்!
- இஸ்ரேலின் புதிய பிரதமர் நாஃப்தலி பென்னட்க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார்.
- பிரதமரின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த நாஃப்தலி பென்னட், பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற எதிர்நோக்கியிருப்பதாக கூறியுள்ளார்.
இஸ்ரேலில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவர்கள் தலைமையிலான லிக்குட் கட்சி 54 இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும் ஆட்சி அமைப்பதற்கு 61 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதால் புதிய அரசு அமைப்பதற்கு பெரும்பான்மையை நிரூபிக்க பெஞ்சமின் நெதன்யாகுக்கு 28 நாள் காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் காலக்கெடுவுக்குள் அவரால் தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், மீண்டும் இஸ்ரேலில் பொது தேர்வு நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் திடீர் திருப்பமாக எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தேசிய ஒற்றுமை அரசை கூட்டணியாக உருவாகியுள்ளது. இந்த கட்சிகளின் கூட்டணி தற்பொழுது கடந்த தேர்தலில் இரண்டாவது இடத்தை பிடித்த யேஷ் ஆதித் கட்சியின் தலைவர் தலைமையில் உருவாகியுள்ளது. இந்நிலையில், இந்த கூட்டணியில் முக்கிய கட்சியாக தீவிர வலதுசாரிக் கட்சியான யாமினா கட்சி இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் நேற்று வாக்கெடுப்பு நடைபெற்றது.
இந்த வாக்கெடுப்பில் யெயர் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி பெரும்பான்மை நிரூபித்ததால் 12 ஆண்டு காலமாகப் பிரதமராக செயல்பட்டு வந்த பெஞ்சமின் நெதன்யாகு ஆட்சி முடிவுக்கு வந்தது. இதனை அடுத்து பாராளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபித்த யெயர் தலைமையிலான கூட்டணி கட்சிகள் மூலம் புதிய பிரதமராக யாமினா கட்சி தலைவரும், முன்னாள் பாதுகாப்புத் துறை மந்திரியும் ஆகிய நஃப்தாலி பென்னெட் அவர்கள் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.
இஸ்ரேலின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள நஃப்தாலி பென்னெட் அவர்களுக்கு பிரதமர் மோடி அவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில், இஸ்ரேலின் பிரதமராக பொறுப்பேற்றிப்பதற்கு வாழ்த்துக்கள் எனவும், இந்திய தூதரக ரீதியிலான உறவு அடுத்த ஆண்டுடன் 30 ஆண்டு நிறைவு பெரும் நிலையில், உங்களை சந்தித்து இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு எதிர்நோக்கி இருப்பதாக பதிவிட்டிருந்தார். பிரதமரின் வாழ்த்து பதிவுக்கு நன்றி தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னெட் இரு நாட்டு உறவை வலுப்படுத்தும் விதமாக பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியிருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
Thank you Mr. Prime Minister @narendramodi, I look forward to working with you to further develop the unique and warm relations between our two democracies. ???????????????? https://t.co/TbwhJuPz9u
— PM of Israel (@IsraeliPM) June 14, 2021