அனுமதி பெற்ற பின்பே கொலை செய்தேன்! ஜப்பான் ட்வீட்டர் கில்லரின் கொடூரமான செயல்!

Default Image

2017 ஆம் ஆண்டு ஜப்பானை சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் திடீரென காணாமல் போனார். அவர் டுவிட்டரில் தற்கொலை செய்து கொள்ள விரும்புவதாக பதிவிட்ட பின்புதான் காணாமல் போயுள்ளார். அவரை எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், திடீரென அப்பெண்ணின் டுவிட்டர் கணக்கை அவரது சகோதரர் திறந்து பார்த்தார்.

அப்போது சந்தேகத்துக்குரிய தகவல்கள் அவருக்கு கிடைத்துள்ளது ட்விட்டரில் டகாஹிரா சிரியாஷி என்பவருடன் உரையாடியது தெரிய வந்தது. போலீசாருக்கு இது குறித்து சந்தேகம் ஏற்பட்ட நிலையில், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதனை தொடர்ந்து, அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டதில், பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளது. தனது வீட்டில் ஒன்பது நபர்களை கொலை செய்து உடல் பாகங்களை தனித்தனியாக வெட்டி குளிசாதன பேட்டி மற்றும் இதர இடங்களில் சேமித்து வைத்துள்ளார். இதனையடுத்து, போலீசார் அவரை கைது செய்த நிலையில், இந்த சம்பவம் ஜப்பானை மட்டுமல்லாது, உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இவர் தற்கொலை செய்ய விரும்புவோரை ட்வீட்டர் வழியாக தொடர்பு கொண்டு, பழக்க வழக்கத்தை ஏற்படுத்தி, பின்னர் அவர்களை கொடூரமாக கொலை செய்து உடல் பாகங்களை பிரித்து வைத்திருக்கிறார். இந்நிலையில், இந்த வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ள நிலையில், இந்த விசாரணையை நேரில் பார்க்க 600-க்கும் மேற்பட்டோர் கூடியுள்ளனர்.

அப்போது சிரியாஷி 9 பேரையும் கொலை செய்ததாக குற்றத்தை ஒப்புக் கொண்டார். குற்றத்தை ஒப்புக் கொண்டால், சட்டப்படி அவருக்கு மரணதண்டனை வழங்க வேண்டும். ஆனால், கொலை  செய்யப்பட்டவரின் ஒப்புதலோடு அவர் கொலை செய்ததால், தண்டனையை குறைக்க வேண்டும் என சிரியாஷியின் வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார்.

ஆனால், சிரியாஷி வழக்கறிஞரின் கூற்றுக்கு மாறாக, அவர் கொலை  பெறாமல் அவர்களை கொலை செய்ததாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்