போக்கிரி படத்தின் ஷூட்டிங்கில் நெப்போலியனிடம் மேனர்ஸ் இல்லையா என்று கேட்டு விஜய் அவர்கள் திட்டியதால் அன்றிலிருந்து அவரிடம் பேசுவதையும், அவர் படத்தை பார்ப்பதையும் விட்டு விட்டேன் .
கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கிக் கிடக்கும் பிரபலங்கள் பலரை யூடியூப் சேனல்கள் மூலம் பேட்டி எடுத்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், விஜய்யுடன் போக்கிரி படத்தில் பிரபுதேவாவிற்காக நடித்தேன். அதனையடுத்து ஷூட்டிங் ஸ்பாட்டில் எனக்கும், விஜய்க்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரின் படத்தை பார்ப்பதை விட்டுவிட்டேன், அவரிடம் பேசுவதுமில்லை என்று கூறியிருந்தார். இது சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தற்போது இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடின் காரணம் வெளியாகியுள்ளது. அதாவது நெப்போலியன் அவர்களின் நண்பர்கள் சிலர் விஜய்யின் தீவிர ரசிகர்களாக இருந்துள்ளனர் அப்போது விஜய்யுடன் போக்கிரி படத்தில் நெப்போலியன் நடிக்கும் போது, அவரது நண்பர்கள் விஜய் அவர்களை சந்திக்க முடியுமா என்று கேட்டுள்ளனர். அதற்கு நெப்போலியன் பார்க்கிறது மட்டுமில்லாமல் போட்டோ கூட எடுக்கலாம் என்று கூறி போக்கிரி படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து சென்றுள்ளார். நெப்போலியன் பெரிய நடிகர் என்றாலும் விஜய்யின் அனுமதி இல்லாமல் நண்பர்களுடன் விஜய்யின் கேரவன் கதவை திறந்துள்ளார். ஆனால் கேரவன் பாய் சார் உங்களை குறித்து எதுவும் சொல்லவில்லை, எனவே வெயிட் பண்ணுங்க என்று கூற நெப்போலியன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வெளியே சத்தம் வருவதை உணர்ந்த விஜய் கேரவனுக்கு வெளியே வந்து கேரவன் பாயை திட்டாமல் நெப்போலியனிடம் சார் உங்களுக்கு கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லையா என்று கோவமாக கேட்டுள்ளார். இதனால் நண்பர்கள் முன் அவமானப்பட்ட நெப்போலியன் மிகுந்த மன வருத்தத்தில் ஆளாகியுள்ளார். இதுவே இவர்களின் கருத்து வேறுபாடுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…