கொட்டாங்குச்சியில் நமது சருமத்திற்கு அழகு சேர்க்க கூடிய, என்ன பயன் உள்ளது எனது பற்றி பார்ப்போம்.
நாம் நமது வீடுகளில் சமையலுக்காக தேங்காய் பயன்படுத்துவதுண்டு. அந்த தேங்காயை பயன்படுத்தி விட்டு,கொட்டாங்குச்சியை தேவையில்லை என்று நினைத்து நாம் தூக்கி எறிவதுண்டு. ஆனால் இதன் பயனை அறிந்தவர்கள் தூக்கி எறிய மாட்டார்கள். ஏனென்றால் இந்த கொட்டாங்குச்சியில் பலவகையான நன்மைகள் நமக்கு உண்டு.
அந்த வகையில் நமது சருமத்திற்கு அழகு சேர்க்க கூடிய ஒரு பயனும் இதில் உள்ளது. அது என்னவென்று பார்ப்போம்.
கொட்டாங்குச்சியை எடுத்து, நன்கு தீயிட்டு கொளுத்த வேண்டும். பின் அதனுள் அந்த கொட்டாங்குச்சி சாம்பலாகும் வரை விட்டுவிடாமல், கொட்டாங்குச்சி நன்கு கருப்பாக மாறும் வரை வைத்து, பின் அதனை எடுத்து ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு நன்கு அடிக்க வேண்டும். அடித்து நன்றாக தூள் போல வந்தவுடன், அதனுள் தேனை கலந்து பேஸ்ட் போல செய்து கொள்ள வேண்டும்.
பின் அதனை நமது முகத்தில் மாஸ்க் போல போட வேண்டும். இன்று நாம் கடைகளில் பல்லாயிரக் கணக்கில் செலவு செய்து வாங்கக்கூடிய சார்கோல் மாஸ்க் என்பது இப்படித்தான் செய்யப்படுகிறது. இதனை நாம் முகத்தில் மாஸ்க் போடுவதன் மூலம், சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி சருமத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் மாற்றுகிறது.
பல் மஞ்சளாக உள்ளவர்கள், வாரம் இருமுறை இந்த கொட்டாங்குச்சி கரித்தூளை வைத்து பல் துலக்கினால், பற்கள் பளபளப்பாக மாறிவிடும்.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…