அட இவ்வளவு நாளா தெரியாம போச்சே…! பீட்ரூட்டில் இப்படி ஒரு ஆற்றல் உள்ளதா…?
பீட்ரூட்டில் நமது சரும அழகை மேம்படுத்த கூடிய பல வகையான ஆற்றல் உள்ளது.
இன்று நாம் சமையலுக்கு பயன்படுத்தக் கூடிய பல காய்கறிகள், நமது சரும அழகை மேம்படுத்த கூடிய ஒன்றாக இருக்கிறது. அப்படிப்பட்ட காய்கறிகளில் ஒன்றுதான் பீட்ரூட். பீட்ரூட்டில் நமது சரும அழகை மேம்படுத்த கூடிய பல வகையான ஆற்றல் உள்ளது.
அந்த வகையில் ஒரு பீட்ரூட், ஒரு கேரட், ஒரு தக்காளி, கொஞ்சம் கருவேப்பிலை கொஞ்சம் இஞ்சி போட்டு அரைத்து தினமும் ஒரு கப் சூப் குடித்து வந்தால் இளநரை பிரச்சனைகள் நீங்கிவிடும்.
முகம் பளபளப்பாக காணப்பட, பீட்ரூட் சாறினை முகத்தில் தேய்த்து 15 நிமிடம் கழித்து தண்ணீரால் கழுவினால் முகம் பொலிவாக காணப்படும்.
பீட்ரூட் ஜூஸை தினமும் குடித்து வந்தால் சருமம் சம்மந்தமான பிரச்சனைகள் நீங்குவதோடு, முகம் பளபளப்பாகவும் காணப்படும். பீட்ரூட்டின் தோலை சீவி துருவி விழுதாக அரைத்து, கைகளில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து நன்கு காய்ந்தப் பின்னர் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு செய்து வந்தால் கைகள் மென்மையாக மாறிவிடும்.