அவரை தவிர எனக்கு வேறு யாரும் இல்லை – நடிகர் செல் முருகன் உருக்கம்!
அவரைத் தவிர எனக்கு வேறு யாருமில்லை என மறைந்த நடிகர் விவேக்கின் மேலாளரும் நடிகருமாகிய செல் முருகன் அவர்கள் டுவிட்டரில் உருக்கமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரை உலகையே தனது நகைச்சுவை தன்மையால் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த நடிகரும் சமூக ஆர்வலருமானவர் தான் மறைந்த பிரபல காமெடி நடிகர் விவேக். கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விவேக் அவர்களுக்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டும், அவர் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலை உயிரிழந்தார். அவரது மறைவிற்கு திரையுலகப் பிரபலங்கள் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வந்த நிலையில், நடிகர் விவேக் அவர்களின் மேலாளரும், நடிகருமாகிய விவேக்கின் நெருங்கிய நண்பர் செல் முருகன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் விவேக் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், அவரை தவிர எனக்கு வேறு யாரும் இல்லை என பதிவிட்டு, ஒரு மரணம் என்ன செய்யும் சிலர் ப்ரொபைலில் கருப்பு வைப்பார்கள், சில ஸ்டேட்டஸில் புகைப்படம் வைப்பார்கள், சிலர் Rip – யுடன் கடந்து போவார்கள். சிலர் ஆழ்ந்த இரங்கலை பதிவிடுவார்கள், சிலர் கண்ணீருடன் கழன்று செல்வார்கள். ஆனால், எனது உண்மையான ஜீவனும் உயிர் தோழனும் ஆகிய அண்ணா என்னை விட்டு விட்டு கடவுள் முருகனை காண காற்றில் கரைந்து விட்டாயே! எல்லாருமே முருகன் தான் துணை என்பார்கள், இனி என் முருகனுக்கு யார் துணை? விடை இல்லாமல் விரக்தியில் கேட்கிறேன் இனி அவனுக்கு யார் துணை? என மிக உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
அவரை தவிர எனக்கு வெருயாருமில்ல pic.twitter.com/rvnXRLXxsw
— cellmurugan@gmail.co (@cellmurugan) April 18, 2021