எனக்கு கொரோனா தொற்று இல்லை..! ஆனால் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் – கனடா பிரதமர்
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோஅவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனையில், நெகட்டிவ் என வந்தபோதிலும், 5 தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனையில், நெகட்டிவ் என வந்தபோதிலும், 5 தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கோவிட்-19 தொற்று பரிசோதனை முடிவு வந்தது. அதில் எனக்கு தொற்று இல்லையென தெரிந்தது. எனது ரேபிட் கிட் சோதனை முடிவு எதிர்மறையாக வந்தபோதிலும், நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவே உணர்கிறேன். ஆகவே சுகாதாரத்துறையின் விதிகளை பின்பற்றி ஐந்து நாட்களுக்கு என்னை தனிமைப்படுத்திக்கொள்கிறேன். நான் தற்போது ஆரோக்கியமான உடல்நிலையுடன் உள்ளேன். அதனால் வீட்டிலிருந்து பணிபுரிய உள்ளேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள், தயவுசெய்து தடுப்பூசி போடுங்கள்’ என பதிவிட்டுள்ளார்.