நான் இதுவரை பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டதில்லை : நடிகை தமன்னா

நடிகை தமன்னா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் கேடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மராத்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துளளார். திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவரிடம் மீடு புகார் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது.
இது குறித்து அவர் கூறுகையில், ‘என் வியப்பின் காரணமாக வேலை செய்யும் இடத்தில பாலியல் துன்புறுத்தலை நான் இதுவரை எதிர்கொண்டதில்லை. நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எனக்கு தெரியும். அப்படி ஒரு அனுபவம் இல்லாமல் போனது எனக்கு அதிஷ்டமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ஆனால் பாலியல் துன்புறுத்தலை துணிச்சலாக எதிர்கொண்ட பெண்கள் பேசியது நல்லது. ஆனால், அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போவது வருத்தமானது.