நான் எப்பொழுதும் விஜய் சாரின் தீவிர ரசிகர் – பாலிவுட் நடிகர்!

Default Image

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள புதிய படம் தான் பீஸ்ட். இந்த  திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள நிலையில், படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் இருந்து அண்மையில் இரு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதுடன், படத்திற்கான எதிர்பார்ப்பையும் ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த படத்தின் தமிழ் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இன்று படத்தின் ஹிந்தி டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ட்ரைலரை பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், பீஸ்ட் ஹிந்தி ட்ரைலரை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி, நான் எப்பொழுதும் விஜய் சாரின் தீவிர ரசிகர் என குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்