“எனக்கு ஒரு தலைவன் பிறந்து இருக்கிறான்”, பிரபல நடிகர் பகிர்ந்த மகிழ்ச்சி செய்தி.!
நடிகர் ரமேஷ் திலக் அவர்களுக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரமேஷ் திலக். அதனையடுத்து மங்காத்தா, மெரீனா, சூது கவ்வும், காலா, கபாலி, டிக் டிக் டிக் போன்ற பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்திலும் , குணச்சித்திர வேடங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடைசியாக இவரது நடிப்பில் ஓ மை கடவுளே படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார்.
இவர் 2018ல் நாவலக்ஷ்மி என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார். ரமேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் எனக்கு ஒரு தலைவன் பிறந்து இருக்கிறான் என்று மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ளார் .
எனக்கு ஒரு #தலைவன் பிறந்து இருக்கிறான்❤️ pic.twitter.com/SZ5bbeRvul
— Ramesh Thilak (@thilak_ramesh) July 30, 2020