அனைவரும் இந்தியர் என்ற எண்ணம் தான் என்னிடம் உள்ளது : நடிகை ரகுல் ப்ரீத் சிங்
நடிகை ரகுல் ப்ரீத் சிங் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் தடையற தக்க என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், நான் டில்லியில் வளர்ந்த பஞ்சாபிய பெண். எனது அப்பா ராணுவத்தில் இருந்ததால் பல நாடுகளை நான் சுற்றி வந்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ஒவ்வொரு நாடக செல்லும் போதும், அப்பா அம்மா மற்றவர்களுடன் எளிதில் இணையமாட்டார்கள். ஆனால், நான் யாருடனும் எளிதில் ஒன்றிவிடுவேன். புதிய மனிதர்களிடம் எளிதில் பழகிடுவேன். அனைவரும் இந்தியர் எனும் எண்ணம் தான் என்னிடம் உள்ளது என கூறியுள்ளார்.