கற்பனை செய்யாத அளவிற்கு வலியை அனுபவித்தேன்.! பிக்பாஸ் முகேன் காதலி வேதனையுடன் வெளியிட்ட வீடியோ.!

பிக்பாஸ் பிரபலமான முகேன் அவர்களின் காதலி நதியா சைபர் புல்லிங் குறித்து வேதனையான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் சீசன் 3 ன் வெற்றியாளர் முகேன். பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த போதே காதலியான நதியா குறித்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அண்மையில் கூட நதியாவின் பிறந்தநாளை முகேன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டார். இந்த நிலையில் தற்போது முகேன் காதலியான நதியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சைபர் புல்லிங் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், நான் ஒரு நடிகை என்றும், இந்த துறையில் நுழைந்த போது எனது நிறம் மற்றும் உருவம் குறித்து பல விமர்சனங்களை சந்தித்து உள்ளேன். ஆனால் கடந்தாண்டு அந்த விமர்சனங்கள் அதிகமாகவே இருந்தது. அந்த சமயங்களில் நண்பர்கள் நம்முடன் இருப்பார்கள் என்று நினைத்தேன், ஆனால் நான் நம்பியவர்கள் அனைவரும் இழிவாக பேசியவர்களின் பக்கம் சாய்ந்து விட்டார்கள். அந்த நேரத்தில் எனக்கு ஏற்பட்ட வலிகளை கற்பனை செய்து கூட பார்க்க இயலாத அளவிற்கு இருந்தது என்று வேதனையுடன் கூறியுள்ளார். தற்போது நதியாவின் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாமகவின் தலைமை நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணியை நீக்கி ராமதாஸ்! எம்எல்ஏ அருளுக்கு இடம்!
July 6, 2025
”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
July 5, 2025
12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!
July 5, 2025
ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!
July 5, 2025