எனது நண்பர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டு போராடுவதை நான் பார்க்க விரும்பவில்லை.
சீனா நாட்டில் வுகாண் என்ற நகரத்தில் உருவான கொரோனா வைரஸானது 25க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. இந்த கொடூரமான வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட 908 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் இந்த நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த நோய்க்கு இதுவரையிலும் எந்த மருத்துவர்களாலும் மருந்து கண்டுபிடிக்க இயலவில்லை. வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக சீன அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், அதனை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
இதனை அடுத்து பிரபல ஹாலிவுட் நட்சத்திரமான ஜாக்கிசான் இந்த நோய்க்காக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த கொடூர வைரசை தோற்கடிக்க விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் முக்கியம். பலரும் இதனை நம்பியுள்ளனர். அதனால் வைரஸை கட்டுப்படுத்த விரைவில் ஒரு மாற்று மருந்து உருவாக்க முடியும் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.
இவ்வாறு தனிநபரோ அல்லது ஒரு அமைப்போ கொரோனா வைரசுக்கு மருந்து கண்டு பிடித்தால் அவர்களுக்கு இந்திய மதிப்பில் ஒரு கோடி ரூபாய் பரிசாக அளிப்பதாக கூறியுள்ளார் இந்த அறிவிப்பு பணத்தைப் பொருட்டாக கொண்டதல்ல. எனது நண்பர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டு போராடுவதை நான் பார்க்க விரும்பவில்லை. அவர்கள் நன்றாக வாழ வேண்டும் அதற்காக தான் இந்த அறிவிப்பு என்று கூறியுள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…