அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம்னு தெரியாம தான் பேசினேன்..நித்யா மேனன் நெத்தியடி பதில்
- திரையரங்கில் வெற்றிநடைப்போட்டு கொண்டிருக்கும் சைக்கோ
- படத்தில் எனது கேரக்டர் பிடித்தபோதும் சில கேட்டவார்த்தகைகளை பேச வேண்டியிருந்தது ஆனால் அதற்கு என்ன அர்த்தம் என்று கூட தெரியாமல் தான் பேசினேன் என்று நடிகை நித்யா மேனன் கூறியுள்ளார்.
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிகை நித்யா மேனன் நடிகை அதிதி ராவ் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகிய சைக்கோ. கதைக்களம் த்ரில்லர் ஜானரில் வெளியாகிய இந்தப் படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் பார்வையற்ற ஒரு மாற்றுத்திறனாளி கேரக்டரில் நடித்திருந்தார். படம் கடந்த 24ம் தேதி வெளியாகியது.ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் படம் வெற்றி பெற்றிருப்பதாக படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் விழா ஒன்றினை நடத்தினர்.
அந்த விழாவில் இயக்குநர் மிஷ்கின், நடிகர் உதயநிதி ஸ்டாலின், நடிகை நித்யா மேனன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
அப்போது விழாவில் நடிகை நித்யா மேனன் பேசினார் அதில் அவர் பேசியதாவது படம் வெற்றிப்படமாக அமைந்தது மனதிற்கு மகிழ்ச்சி.நல்ல கதையம்சங்களை கொண்ட சிறு பட்ஜெட் படம் என்றாலே பிடிக்கும். பணத்தை வீணடிக்காமல் நல்ல படங்களை எடுப்பது தான் எனக்கு பிடிக்கும். இயக்குநர் மிஷ்கின் மிக நேர்மையான இயக்குநர். இவர் போன்ற இயக்குநர்களின் கதையில் நடிப்பது நடிப்பவர்களுக்கு ஒரு உற்சாகத்தை கொடுக்கும்.
மேலும் இந்த படத்தில் எனது கேரக்டர் பிடித்ததுதான் என்றாலும் அதில் சில கெட்ட வார்த்தைகளை பேச வேண்டியிருந்தது. அவற்றை என் வாழ்க்கையில் நான் பேசியதே இல்லை. இன்னும் பல வார்த்தைகளுக்கு என்னம் அர்த்தம் என்று கூடத் தெரியாமலேயே பேசியிருந்தேன்.
படத்தில் பேசுவதற்கு முன் கொஞ்சம் தயக்கம் இருந்தது. இயக்குநர் மிஷ்கின் மீதான நம்பிக்கையால் தான் இந்தப் படத்திலே நடித்தேன். என்னை அவர் ஒரு குழந்தைபோல பார்த்துக் கொண்டார். என்னை எப்பொழுதும் பாப்பா என்றுதான் அழைப்பார் என்று மகிழ்ச்சி பொங்க பேசியிருந்தார்.இதனையடுத்து வந்து பலர் பேசினர் அதன் பின்னர் படத்தின் இயக்குநர் பேசுகையில் படகுறித்த பல தகவல்களை சுவராஸ்சியமாக பகிர்ந்தார் அப்பொழுது நடிகை நித்யா மேனனைப் பற்றிப் பேசிய இயக்குநர் மிஷ்கின் நித்யா மேனன் எனக்குத் தங்கை போல கிடைத்தவர். என்னை முழுவதும் புரிந்து கொண்ட நடிகை என்று கூறினார்.