இதை பற்றியெல்லாம் நான் கவலைப்படுவதில்லை! நடிகை ரம்யா பாண்டியன் அதிரடி!
- ரம்யா பாண்டியனின் பேட்டி.
- இதை பற்றியெல்லாம் நான் கவலைப்படுவதில்லை.
நடிகை ரம்யா பாண்டியன் தமிழ் சினிமாவில் ஜோக்கர் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து டம்மி டப்பாசு, ஆண் தேவதை போன்ற படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு இவர் நடத்திய போட்டோ ஷூட் மூலம் வைரல் ஆனார்.
சமீபத்தில் இவர் புத்தாண்டு குறித்து பேட்டி அளித்துள்ளார். இவர் அளித்துள்ள பேட்டியில், 2019-ம் ஆண்டு ரொம்ப சிறப்பாக இருந்தது. 2020-ம் ஆண்டும் சிறப்பாகவே இருக்கும் என கருதுகிறேன். நான் சேலையில் நடத்திய போட்டோ ஷூட்டுக்கு பெரிய வரவேற்பு கிடைக்கும் என நான் நினைக்கவில்லை.
சேலைக்கும் உள்ள பிணைப்பாகவும், அதிஷ்டமாகவும் இருக்கலாம் என கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், சமூக வலைத்தளங்களில் வரும் நெகட்டிவ் கமெண்ட்களை பற்றி நான் கவலைப்படுவது இல்லை என்றும் கூறியுள்ளார்.