எனது ரசிகர்களிடம் நடந்துகொள்ளும் முறை பிடிக்கவில்லை எனவே இனி அவருடன் நடிக்க மாட்டேன் – ஸ்ருதிஹாசன்!
தன்னை காணவரும் ரசிகர்களை கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பதாகவும். எனவே சுருதிகாசன் விஜய்சேதுபதியுடன் இனி படத்தில் நடிக்க மாட்டேன் எனவும் கூறி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னணி நடிகைகளில் ஒருவராக தமிழ்த் திரையுலகில் வலம் வருபவர் தான் நடிகை ஸ்ருதிஹாசன். இவரது நடிப்பில் அண்மையில் வெளியாகிய கிராக் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி நடை போட்டு வரும் நிலையில், தற்பொழுது இவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தான் இவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க கூடிய முதல் படம்.
இருப்பினும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது அங்கு வரக்கூடிய தனது ரசிகர்களை விஜய் சேதுபதி கட்டியணைத்து முத்தமிடுவது தனக்கு பிடிக்கவில்லை என ஸ்ருதிஹாசன் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியேறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் ஒரு நாள் மட்டுமே லாபம் படத்திற்கான படப்பிடிப்பு உள்ள நிலையில் விஜய் சேதுபதியுடன் ஸ்ருதிஹாசன் நடிக்க மாட்டேன் என கூறி உள்ளதால் பட குழுவினர் அவரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.