அட… ச்சா… இவ்வளவு நாளா தெரியாம போச்சே…!!! காளானில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா….?
காளான் என்பது பல வகைகளில் உள்ளது. இவரில் சத்து நிறைந்த காளான்கள் ஒரு சில காளான்கள் தான். இந்த காளான்கள் மிகவும் சத்துக்கள் நிறைந்த காளான்கள். இது நமது உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது. அவற்றின் பயன்களை பற்றி பார்ப்போம்.
பயன்கள் :
கொழுப்பு :
காளானை தினமும் உணவில் சேர்த்து வந்தால் இரத்தத்தில் உள்ள தேவையில்லாத கெட்ட கொழுப்புகளை கரைத்து, உடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது. இதனால் உடல் எடையை குறைக்க விரும்புவார்கள் காளான் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
இரத்த நாள பாதிப்பு :
காளானில் அதிகமான சத்துக்கள் உள்ளது. மேலும் காளானில் தாமிரச்சத்து அதிகமாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர் செய்கிறது.
மூட்டு வாதம் :
மூட்டு வாதம் உள்ளவர்கள் காளானை உணவில் அதிகமாக சேர்த்து வந்தால் மூட்டு வாதத்திற்கு ஒரு சிறந்த நிவாரணியாக உள்ளது.
மலசிக்கல் :
இந்த காளானை உனஸில் அதிகமாக சேர்த்து வந்தால் மலச்சிக்கலில் இருந்து விடுதலை அளிக்கிறது. இது எளிதில் சீரணமாகும் தன்மை கொண்டது.
உடல் இளைத்தவர்கள் :
காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, உடல் இளைத்து போனார்கள் காளான் சூப் வைத்து குடித்தால், உடலுக்கு ஆரோக்கியம் அளித்து உடலை தேற்றுகிறது.
தாய்ப்பால் :
குழந்தை பெற்ற தாய்மார் காளான் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டது. எனவே பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதை தவிர்ப்பது நல்லது.