அந்த காட்சியில் நான் சிரிக்கவில்லை.. நீக்கப்பட்ட காட்சி குறித்து கௌரி கிஷன் பதில்!
மாஸ்டர் படத்தின் நீக்கப்பட்ட காட்சியில் தான் சிரிக்கவில்லை என்றும் சில கோணங்களில் அப்படி இருக்கலாம் என்று நடிகை கௌரி கிஷன் கூறியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது.அதிலும் மிரட்டலான வில்லனாக விஜய் சேதுபதி நடித்து அசத்தியிருப்பார் .மேலும் இந்த படத்தினை வீட்டிலிருந்தே பார்க்கும் வகையில் அண்மையில் ஓடிடி தளமான அமேசான் பிரேமில் வெளியாகி அங்கையும் மக்களின் அதிகப்படியான வரவேற்பை பெற்று வருகிறது.
மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் என்றும் , அது அதிகம் என்பதால் பல காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. அந்த வகையில் தற்போது மாஸ்டர் படத்திலிருந்து நீக்கப்பட்ட ஒரு காட்சியை அமேசான் நிறுவனம் வெளியீட்டது
அந்த காட்சியில் நடிகை கௌரி கிஷன் சிரிப்பது போல் இருப்பதாகவும் அதனால் தான் அந்தக்காட்சியை படத்திலிருந்து நீக்கியதாகவும் சிலர் கூறிவந்தனர். இதற்கு தற்போது கௌரி கிஷன் பதிலளித்துள்ளார் ” நான் அந்த கட்சியில் சிரிக்கவில்லை சில கோணங்களில் அப்படி இருக்கலாம். நான் அப்படி அந்த காட்சியில் சிரித்திருந்தால் டப்பிங் வரை அந்த கட்சியை கொண்டுவந்திருக்க மாட்டார்கள். படத்தின் நீளம் அதிகமாக இருப்பதால் அந்த காட்சியை நீக்கி இருப்பார்கள் என்று கூறியுள்ளார்.