தான் பணத்துக்காகவோ புகழுக்காகவோ இல்லை என்று நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
நடிகை கங்கனா ரனாவத் தற்போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள தலைவி என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கான டிரைலர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. மேலும் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் நடிகரை கங்கனா ரனாவத் அளித்த பேட்டியில் கூறியதாவது, எனது பெற்றோரின் ஆண்குழந்தை நான் பிறந்த போது இறந்து போனதால் நான் அவர்களுக்கு பிடிக்காத குழந்தையாகவே வளர்ந்தேன். என் மீது அவர்கள் வெறுப்பு காட்டி வளர்த்தார்கள். ஆனால் இப்போது என்னை சிறந்த நடிகை என்று பாராட்டுகிறார்கள்.
நான் நடிப்பதே பணத்துக்காகவோ புகழுக்காகவோ இல்லை. குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் என்னால் தான் நடிக்க வைக்க முடியும் என்று தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் நம்புகிறார்கள் அதனால்தான் நானும் நடிக்கிறேன். இது எனக்கு பெருமையாக உள்ளது. குழந்தையாக இருந்தபோது நான் விற்கப்படும் நிலையில் இருந்தாலும் இப்போது உலகம் போற்றும் நாடியாக இருப்பது மகிழ்ச்சி” என்றும் கூறியுள்ளார்.
குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக இருக்கக்கூடிய நுணாமரம் எனும் மஞ்சனத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் பயன்களையும் இந்த செய்தி…
சென்னை: விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை நடைபெற்றது. காலையில்…
சென்னை: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கடந்த ஆண்டு (2023) டிச. 28இல் காலமானார். அவர் மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது.…
டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் டெல்லியில் தொடங்கியது. மோதிலால் நேரு தெருவில் உள்ள அவரது…
டெல்லி: உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) சிகிச்சை பலனின்றி நேற்று முன்…
சென்னை: விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும்…