எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை கடவுள் தந்த வரமாக கருதுகிறேன்! அதிபர் ட்ரம்ப் அதிரடி!
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பில் உலக அளவில், வல்லரசு நாடான அமெரிக்க முதலிடத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் உள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், ஒரு சில தினங்களிலேயே, முழுமையாக குணமடையாமல், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.
இந்நிலையில், இதுகுறித்து அதிபர் ட்ரம்ப் அவர்கள் கூறுகையில், ‘எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை கடவுள் தந்த வரமாக கருதுகிறேன். கொரோனாவுக்கான மருந்து கண்டுபிடிப்பதன் அவசியத்தை கடவுள் கற்று தந்துள்ளார்.’ எனக் கூறியுள்ளார்.