இடிமுழக்கம் படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைந்துள்ளது.
இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் தற்போது யானை, மாறன், வாடிவாசல் போன்ற பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுமட்டுமின்றி இடிமுழக்கம், செல்ஃபி ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இதில் இடிமுழக்கம் படத்தை இயக்குனர் சீனு ராமசாமி இயக்கியுள்ளார். படத்தில் ஜிவிக்கு ஜோடியாக நடிகை காயத்திரி நடித்துள்ளார். ஸ்கைமன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் இந்த படத்தை தயாரிப்பாளர் கலைமான் தயாரிக்கிறார்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. விறு விறுவென நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது.
இதனை ஜிவி பிரகாஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இது குறித்து இடிமுழக்கம் படப்பிடிப்பு இனிதே நிறைவு பெற்றது , திருவிழா முடிந்து பள்ளிக்கு செல்லப் போகும் மாணவனை போல சென்னை வருகிறேன்.இந்த அழகான நாட்களை நினைவுகளாக எனக்கு தந்த சீனு ராமசாமி சாருக்கு நன்றி. என பதிவிட்டுள்ளார்.
சென்னை : திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அண்மையில் தனது தொகுதியான காட்பாடியில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் பேசுகையில், மாற்றுத்திறனாளிகள்…
சென்னை : திமுக அமைச்சர் பொன்முடி அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசுகையில், உடலுறவு குறித்து மறைமுகமாக இரு சமூகத்தை…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்திருந்திருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழிசை சௌந்தரராஜன் வீட்டிற்கு நேரில் சென்று…
சென்னை : அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி, விலைமாது பெண் பற்றி கதை கூறினார்.…
பெங்களூரு : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில்…
சென்னை : தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அவர் பேசிய பேச்சுக்கள்…