இயக்குனர் மனிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்திற்கான இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
பிரமாண்டமாக நடைபெற்ற இந்த இசை வெளியீட்டு விழாவில் ரஜினி காந்த், கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர், இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதையும் படியுங்களேன்- நீண்ட நாள் காத்திருப்பு.! வெளியானது பொன்னியின் செல்வனின் பிரம்மாண்ட டிரைலர்.!
இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய ரஜினிகாந்த் சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் “மணிரத்னம் திறமையான இயக்குனர். ஆரம்பத்தில் சின்ன சின்ன நடிகர்களை வைத்து படம் பண்ணி தனது சினிமா கேரியரை உயர்த்தி இன்று பெரிய இடத்திற்கு வந்துள்ளார். அந்தகாலத்தில் முதல் பாகம்ம், இரண்டாம் பாகம் என்றெல்லாம் தனியாக படம் எடுக்க முடியாது. அதனால் தான் பொன்னியின் செல்வன் அப்போது படமாக எடுக்க முடியவில்லை.
பொன்னியின் செல்வன் படத்தில் வரும் நந்தினி கதாபாத்திரம் தான் நான் நடித்த படையப்பா படத்தில் வரும் நீலாம்பரி கதாபாத்திரத்திற்கான இன்ஸ்பரேசன் அந்தக்காலத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் பொன்னியின் செல்வனில் வரும் வந்தியதேவன் கேரக்டர் யார் பண்ணினால் நன்றாக இருக்கும் என ஒரு பேட்டியில் கேட்டார்கள்.
அதற்கு அவர் ரஜினிகாந்த் என்று கூறினார். அவர் சொன்னது மகிழ்ச்சியாக இருந்தது. பெரிய பழுவேட்டரையர் வேடத்தில் நான் நடிக்கவா என்று மணிரத்னத்திடம் கேட்டேன். அதனை அவர் மறுத்துவிட்டார்” என்ற சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார்.
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக திமுகவை விமர்சித்து பேசி வருவதால் அவருக்கு திமுக…
சென்னை : தரமான படைப்புகளை எப்போது ஏமாற்றம் அளிக்காமல் மக்களுக்கு கொடுக்கும் இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். இதுவரை இவர் இயக்கிய…
சென்னை: ஒன்றிய அரசின் தேர்வு முகமைகள் எப்போதுமே பொங்கலை குறி வைப்பது ஏன்? ஒன்றிய அரசின் கீழ் உள்ள தேர்வு…
திருநெல்வேலி: நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு, வழக்கு விசாரணைக்கு வந்த இளைஞர் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல்…
சென்னை: மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற…
சென்னை :நெல்லிக்காய் குல்கந்து தித்திக்கும் சுவையில் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; நெல்லிக்காய்…