என் கணக்கு தப்பா போனதில் ரொம்ப மகிழ்ச்சி – கஸ்தூரி.!
நடிகை கஸ்தூரி ட்வீட்டரில் டாஸ்மாக்கை இப்போது திறப்பதில்லை என்ற நல்ல முடிவை எடுத்துள்ள தமிழக அரசுக்கு நன்றி. நானும் கூட கண்டிப்பாக திறப்பார்கள் என்று எண்ணினேன் என்று ட்வீட் செய்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக அதனை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் நாடு முழுவதும் மே 17 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் சில மாவட்டங்களுக்கு ஊரடங்கில் தளர்வு செய்யவும் ஆணை பிறப்பித்துள்ளது. இதனால் சமூக இடைவெளியை பின்பற்றி சில அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளும் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகளையும் திறக்கப்படுமோ என்ற அச்சம் பலரிடமும் இருந்து வந்த நிலையில் இதுவரை டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கான எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. பல குடும்பங்களை நடுரோட்டில் கொண்டு வருவது இந்த டாஸ்மாக் தான். இதனாலேயே பல குடும்பங்களுக்கு டாஸ்மாக் என்றாலே பயம் தான்.
இதனை குறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றியை தெரிவித்து டுவிட் ஒன்னற பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, டாஸ்மாக்கை இப்போது திறப்பதில்லை என்ற நல்ல முடிவை எடுத்துள்ள தமிழக அரசுக்கு நன்றி. நானும் கூட கண்டிப்பாக திறப்பார்கள் என்று எண்ணினேன். என் கணக்கு தப்பாய் போனதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. தாய்மார்கள், குழந்தைகள் சார்பாக மீண்டும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் கை இப்போது திறப்பதில்லை என்ற நல்ல முடிவை எடுத்துள்ள தமிழக அரசுக்கு நன்றி நன்றி.
நானும் கூட கண்டிப்பாக திறப்பார்கள் என்றே எண்ணினேன். என் கணக்கு தப்பாய் போனதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி.தாய்மார்கள், குழந்தைகள் சார்பாக மீண்டும் நன்றி ! @CMOTamilNadu @PThangamanioffl
— Kasturi Shankar (@KasthuriShankar) May 3, 2020