அமெரிக்க ஜனாதிபதிகளிலேயே கடினமாக உழைப்பவன் நான்தான்; ட்ரம்ப் .!

என்னை பற்றி தெரிந்தவர்கள், அமெரிக்க ஜனாதிபதிகளிலேயே கடினமாக உழைப்பவன் நான்தான் என்று கூறுகிறார்கள்
அமெரிக்காவில் தற்போது கொரோனா பாதிப்பால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதற்கு காரணம் ட்ரம்ப் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ளாததே என பலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்க பத்திரிக்கை ஒன்றில் ,டொனால்டு டிரம்ப் மதிய வேளையில்தான் அலுவலகத்துக்கு வருவதாகவும், பிறகு தனது படுக்கையறையில் பிடித்த உணவை சாப்பிட்டு வருவதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.
இதற்குபதிலளித்த டிரம்ப் , என்னை பற்றி தெரியாத ஒரு நிருபர் எனது பணியை பற்றியும், உணவு பழக்கத்தை பற்றி பொய்யாக எழுதி உள்ளார். என்னை பற்றி தெரிந்தவர்கள், அமெரிக்க ஜனாதிபதிகளிலேயே கடினமாக உழைப்பவன் நான்தான் என்று கூறுகிறார்கள்.
அதுபற்றி எனக்கு தெரியாது. ஆனால், நான் கடின உழைப்பாளி. அதிகாலையிலேயே அலுவலகத்திற்கு வந்து நள்ளிரவுவரை வேலை பார்க்கிறேன். சில மாதங்களாக வெள்ளை மாளிகையை விட்டு வெளியே சென்றதில்லை என தெரிவித்துள்ளார்.