நான் முதல் பெண்தான்.. ஆனால் நான் கடைசி பெண்ணல்ல-கமலா ஹாரிஸ்..!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதனால், கமலா ஹாரிஸ் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்கவுள்ளார்.
இந்நிலையில் மக்களிடம் உரையாற்றிய கமலா ஹாரிஸ், நம்பிக்கையுடன் அமெரிக்கா வந்த என் தாயை இந்த வெற்றி தருணத்தில் நினைவு கூர்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நன்றி. யாருக்கு வாக்களித்திருந்தாலும் அனைத்து அமெரிக்கர்களுக்காகவும் உழைப்பேன்.
துணை அதிபராகிய முதல் பெண்ணாக நான் இருக்கலாம், ஆனால் நான் கடைசி பெண்ணல்ல. வெற்றிக்காக உழைத்த அனைத்து மக்களுக்கும் நன்றி, மக்கள் ஜனநாயகத்தை காப்பாற்றியுள்ளனர் என்னை துணை அதிபராக தேர்வு செய்துள்ள அமெரிக்க மக்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் அதிபர் தேர்தல் மூலம் அமெரிக்காவில் எதுவும் சாத்தியமாகும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை முதல்..இந்தியாவுக்கு வரி விதித்த ட்ரம்ப் வரை!
April 3, 2025
டிரம்ப் அதிரடி வரி விதிப்பு.! உலக நாடுகள் கடும் எதிர்ப்பு! சீனா, கனடா, ஆஸ்திரேலியா, தைவான்….
April 3, 2025