மாஸ்டர் படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை சங்கீதா பேசியுள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் செய்தது. படத்தில் அனிருத் இசையில் வெளியான அணைத்து பாடல்களும் மிகப்பெரிய வெற்றியை கண்டது.
இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், சங்கீதா, போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த நிலையில், இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த சங்கீதா அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்து பேசியுள்ளார்.
அதில் ” மாஸ்டர் படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சாருக்கு நன்றி. எனக்கு விஜய் சார்கூட நடிக்கிறேன்னு அவ்வளவு சந்தோஷம். படப்பிடிப்பில் நான் நடிக்கும் போது என் படபடப்பைப் பார்த்துட்டு, இயல்பா பேசி படபடப்பை விஜய் சார் குறைச்சார். நேர்ல கடவுளைப் பார்த்தா எப்படி ஒரு பதற்ற இருக்குமோ அந்த மாதிரி ஒரு பதற்றம் இருந்துச்சு. ஆனா, அவர் பேசினதும் அதெல்லாம் மறைஞ்சிடுச்சு” என்று தெரிவித்துள்ளர்.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…