நேர்ல கடவுளைப் பார்த்தது போல ஒரு பதட்டம் – மாஸ்டர் சங்கீதா.!

Default Image

மாஸ்டர் படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை சங்கீதா பேசியுள்ளார். 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் செய்தது. படத்தில் அனிருத் இசையில் வெளியான அணைத்து பாடல்களும் மிகப்பெரிய வெற்றியை கண்டது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், சங்கீதா, போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த நிலையில், இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த சங்கீதா அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்து பேசியுள்ளார்.

அதில் ” மாஸ்டர் படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சாருக்கு  நன்றி. எனக்கு விஜய் சார்கூட நடிக்கிறேன்னு அவ்வளவு சந்தோஷம்.  படப்பிடிப்பில் நான் நடிக்கும் போது என் படபடப்பைப் பார்த்துட்டு, இயல்பா பேசி படபடப்பை விஜய் சார் குறைச்சார். நேர்ல கடவுளைப் பார்த்தா எப்படி ஒரு பதற்ற இருக்குமோ அந்த மாதிரி ஒரு பதற்றம் இருந்துச்சு. ஆனா, அவர் பேசினதும் அதெல்லாம் மறைஞ்சிடுச்சு” என்று தெரிவித்துள்ளர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்