கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன் – சுரபி..!!
கவர்ச்சியாக நடிக்க கூட தயாராக இருக்கிறேன் என்று நடிகை சுரபி சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நடிகை சுரபி தமிழ் சினிமாவில் கடந்த 2013 ஆம் ஆண்டு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 வில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்கு பிறகு அவருக்கு தமிழ் அந்த அளவிற்கு பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. தற்போது ஜிவி பிரகாஷிற்கு ஜோடியாக அடங்காதே என்ற படத்திலும், 1 கன்னட படத்திலும், 3 தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகை சுரபி சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தான் நடிக்கும் கதாபாத்திரத்திற்கான விருப்பங்களை கூறியுள்ளார். இதில் அவர் கூறியது ” நான் துறு துறு பெண்ணாக படத்தில் நடிக்க விரும்புகிறேன். மிகவும் விதியசமான கதாபாத்திரத்தில் நடிக்க ஆவலுடன் இருக்கிறேன். அதைபோல் கவர்ச்சியாக நடிக்க கூட தயாராக இருக்கிறேன் என்றும் வெளிப்படையாக கூறியுள்ளார்.