நான் எதையும் இழக்கவில்லை இர்பான்கான் மனைவியின் உருக்கமான பதிவு.!
இர்பான்கானின் மனைவி சுதாபா, இர்பான்கானுடன் இணைந்துள்ள புகைப்படத்தை வெளியிட்டு “நான் எதையும் இழக்கவில்லை, ஒவ்வோரு வகையிலும் நான் பெற்றுள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்
இர்பான்கான், பல இந்தி படங்களில் நடித்த பிரபல பாலிவுட் நடிகர். இவர் அது மட்டுமின்றி லைஃப் ஆஃப் பை, ஜூராசிக் வேர்ல்ட் போன்ற ஹாலிவுட் படங்களிலும் நடித்து தேசிய விருதை வென்றுள்ளார். இந்த நிலையில் இவர் புதன்கிழமை காலை காலமானார் . 54 வயதான இர்பான்கான் பெருங்குடல் தொற்று காரணமாக காரணமாக மும்பையில் உள்ள கோகிலாபென் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் . இவர் ஏற்கனவே புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவரின் மறைவுக்கு பல பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வந்தனர்
இர்பான்கான் டெல்லியில் தேசிய நாடக பள்ளியில் படிக்கும் போது சுதாபா சிக்தாரை காதலித்து 1995ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பாபில் மற்றும் அயான் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் இர்பான்கானின் மனைவி சுதாபா, இர்பான்கானுடன் இணைந்துள்ள புகைப்படத்தை வெளியிட்டு “நான் எதையும் இழக்கவில்லை, ஒவ்வோரு வகையிலும் நான் பெற்றுள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.